ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

600 கலைஞர்கள்.. இசைக்கப்பட்ட பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள்.. ரசித்து பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

600 கலைஞர்கள்.. இசைக்கப்பட்ட பறையாட்டம், நாட்டுப்புற பாடல்கள்.. ரசித்து பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை சங்கமம்

சென்னை சங்கமம்

chennai sangamam 2023 | சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

முந்தைய திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்ச்சி, அதன்பிறகு, சுமார் 11 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்துவந்தது. இந்த நிகழ்ச்சியை மீண்டும் கொண்டாட முடிவு செய்த தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை, இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது. இதன் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

600 கலைஞர்களால் நடத்தப்பட்ட நாட்டுப்புற பாடல்கள், பறையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் கலையும் கலைஞர்களும் சங்கமிக்கும் விழா சென்னை சங்கமம் என்றார். திராவிட இயக்கம்தான் கலைகளின் மூலம், சாமானிய மக்களின் வலிகளைப் பேசியதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் தீவுத்திடல், கொளத்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட 18 இடங்களில் பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட 40 வகையான பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வரும் 17-ம் நடைபெறவுள்ளன.

First published: