பேய்க்கு பிரம்படி... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் வழக்கில் 6 மாதங்களுக்கு பிறகு திடீர் திருப்பம்

Youtube Video

பேய் ஒட்ட சென்ற இளைஞர் திடீரென இறந்த வழக்கில் ஆறு மாதங்களுக்கு பிறகு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் 29 வயதான மகபூப் பாஷா ஆயிஷா தம்பதி. மகபூப் பாஷா தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்துள்ளார். கடந்த மே மாதத்தில் இருந்து மகபூப் பாஷா திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்டது போல் நடந்துள்ளார். இதனால் மனைவி ஆயிஷா கணவருக்கு பேய் பிடித்ததாக நினைத்து ஸ்டான்லி தர்காவிற்கு அழைத்து சென்று அங்கு இரண்டு நாட்களாக பேய் ஓட்டியுள்ளார்.

ஆனாலும் கணவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று உறவினர்களிடம் புலம்பியுள்ளார். அப்போது செங்குன்றம் பொத்தூர் அம்மன் கோவில் அருகே உள்ள சாமியார் சங்கர் பேய் ஓட்டுவார் என உறவினரின் தெரிவித்துள்ளனர். ஆயிஷாவும் இதை நம்பி சாமியார் சங்கரிடம் தனது கணவரை பேய் ஒட்ட அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மகபூப் பாஷாவிற்கு பேய் பிடித்துள்ளதாக கூறிய சாமியார் சங்கர் பத்து நாட்களாக பூஜை செய்து பேயை ஓட்டுவதாக கூறியுள்ளார். பேய் ஒட்டுவதாக கூறிய சாமியார் மகபூப் பாஷாவை கட்டி வைத்து பிரம்பால் அடித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதியன்று திடீரென்று மகபூப் பாஷாவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது .மனைவி ஆயிஷா கணவன் பாட்ஷாவை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் பாட்ஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இளைஞர் திடீர் மரணம் என்பதால் வண்ணாரப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடந்த புதன் கிழமை மெகபூப் பாஷா இறப்பிற்கான பிரேத பரிசோதனை அறிக்கை தயாரானது. அதில் மகபூப் பாஷா பேய் ஓட்டுவதாக கூறி கொம்பால் அடித்ததால் உள்காயம் ஏற்பட்டு ரத்த ஓட்டம் நின்றதன் காரணமாக இறந்துள்ளதாக அறிக்கையில் தெரிய வந்தது. அறிக்கையின் அடிப்படையில் சாமியார் சங்கரை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: