Home /News /tamil-nadu /

கடையிலிருந்த உலோக சிலைகளை திருடி, கடை உரிமையாளரிடமே விற்பனை செய்து வந்த கடை ஊழியர் கைது

கடையிலிருந்த உலோக சிலைகளை திருடி, கடை உரிமையாளரிடமே விற்பனை செய்து வந்த கடை ஊழியர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கடை மேலாளரான சண்முகத்தை கைது செய்த மைலாப்பூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடை மேலாளரான சண்முகத்தை கைது செய்த மைலாப்பூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடை மேலாளரான சண்முகத்தை கைது செய்த மைலாப்பூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
சென்னையில் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து உலோக சிலைகளை திருடி அவற்றை கடை முதலாளியிடமே விற்பனை செய்து வந்த கடை மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சுவாரஸ்ய சம்பவம் நடந்தேறியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் வடக்கு மாட வீதி, சி.பி கோவில் தெருவில் உலோக சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் BLT Store என்ற கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உரிமையாளர் மைலாப்பூரைச் சேர்ந்த தியாகராஜன்(55) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடையை நடத்தி வருகின்றார்.

இந்த கடையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ராணிப்பேட்டையச் சேர்ந்த சண்முகம்(56) என்பவர் சேல்ஸ் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடை உரிமையாளர் இரு தினங்களுக்கு முன் சண்முகத்தின் அறைக்கு ஏதேச்சையாக சென்ற போது அங்கு 9 சிலைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சண்முகத்திடம் அவர் விசாரித்தபோது, பிடிபட்ட சிலைகள் அனைத்தும் கடையில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தியாகராஜன் மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடராக சண்முகத்தை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

விசாரணையில் கடையின் மேலாளராக இருக்கும் சண்முகம், பாரிஸ் பகுதிகளுக்கு சென்று கடைக்கு தேவையான உலோக சிலைகளை வாங்கி  வருவதும் அப்படி வாங்கி வரும் போது அரை கிலோ, ஒரு கிலோ அளவிளான சிலைகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

திருடப்பட்ட சிலைகள்


பின்னர் அந்த சிலைகளை சில நாட்கள் கழித்து பாரிஸ் பகுதியிலிருந்து வாங்கி வந்ததாக கூறி ஒரு சிலைக்கு ரூ.2000 - ரூ.5000 வரை கடை உரிமையாளரான தியாகராஜனிடமே விற்று வந்ததும் தெரியவந்தது.

கடந்த சில மாதங்களில் இதே போல 15 க்கும் மேற்பட்ட சிலைகளை கடை மேலாளரான சண்முகம், கடை உரிமையாளரான தியாகராஜனிடம் விற்றுள்ளார்.
மேலும், போலீசார் விசாரணையில் கடையில் சம்பளமாக கொடுக்கும் ரூ.15 ஆயிரம் பணம் குடும்பத்தை நடத்த போதவில்லை எனவும் கடந்த சில மாதங்களாக மட்டும் தான் இதே போல செய்து வருவதாகவும் தான் தொடர் திருடன் இல்லையெனவும் சண்முகம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் வாசிக்கநாமக்கல்லில் மீன் வளர்ப்பு பண்ணை குட்டை அமைக்க மானியம்... விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்

ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் தியாகராஜன் ‘ கடந்த 5 ஆண்டுகளாக சண்முகம் இதேபோல தன்னை ஏமாற்றி வந்துள்ளார் எனவும் அவற்றின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் அதிகம்’ எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கடை மேலாளரான சண்முகத்தை கைது செய்த மைலாப்பூர் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Chennai, Crime News

அடுத்த செய்தி