சென்னை - சேலம் 8 வழிச்சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம் எனவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டிவிடவே எதிர்க்கட்சிகள் செயல்படுவதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளர்.
சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை-சேலம் எட்டுவழிச் சாலை, மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள மிகச்சிறந்த திட்டம் என்றார். மேலும் அரசுக்கு மக்களிடையே நல்ல பெயர் உள்ளதால் வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்த முயற்சி செய்யப்பட்டு வருகிறது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 8 வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதற்காக நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இந்த திட்டத்தால் சேலம் மட்டுமே பயனடையப் போவதில்லை என்றும், அருகில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பயன்பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். இந்த திட்டம் தொடர்பாக, இதுவரை எந்த விவசாயி மீதும் வழக்கு போடவில்லை என்றார் அவர்.
மேலும் இந்த திட்டத்தால் எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்; விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர்சமூக ஆர்வலர்கள் இதுவரை ஏன் அரசின் வளர்ச்சித் திட்டங்களை பற்றி பாரட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். உதாரணமாக அரசு மருத்துவமனையில் இரு கைகளையும் இழந்த ஒருவருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக கைகள் பொருத்தப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, ஏன் அதை பற்றி யாரும் எந்த சமூக ஆர்வலர்களும் பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் இன்னும் 40 சாலைகள் விரிவாக்கப்பட உள்ளன என்றார் எடப்பாடி பழனிசாமி.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.