சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டம் மக்கள் ஆதரவுடன் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், ‘அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து. தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் அதற்கு முழு தீர்வு காணப்படும் . காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோதாவரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்படும்’ என்று பேசினார்
மேலும் அவர், சென்னை - சேலம் எட்டுவழிச்சாலை திட்டம் நீதிமன்றத்தால் தற்போது தடையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் உள்ளிட்டோரிடம் பேசி தீர்வு காணப்படும். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். இப்பகுதிக்கு இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது. அதனாலேயே முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்துகிறார். 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கொடுத்த வாக்குறுதி 100% நிறைவேற்றித் தரப்படும். தமிழகத்தில் அதிமுக-பாஐக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார். தமிழகம் தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம், தொழில் முனைவோருக்கு அதற்கான அடிப்படை கட்டமைப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Also watch
Published by:Prabhu Venkat
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.