சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது - மத்திய அரசு

8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

news18
Updated: August 7, 2019, 12:04 PM IST
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது - மத்திய அரசு
உச்ச நீதிமன்றம்
news18
Updated: August 7, 2019, 12:04 PM IST
சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு இன்று  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. மேலும் 8 வழிச்சாலை திட்டத்துக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து பேசிய நீதிபதிகள் '8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க முடியாது. 8 வழிச்சாலை வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் ஆக.22 முதல் விசாரணை தொடங்கும்’ என்று கூறினர்.


இதையடுத்து வழக்கு ஆக.22 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Also watch

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...