கோடம்பாக்கம் டெய்லருடன் பழக்கம்.. டெக்கரேட்டர் கணவரை கொன்று நாடகமாடிய மனைவி

கைதான நிரோஷா

கணவரை யாரோ கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாக நிரோஷா நாடகமாடி உள்ளார்.

  • Share this:
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் கோதண்டபாணி வயது 36. இவர் இன்டீரியர் டெகரேஷன் தொழில் செய்து வந்தார். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சைதாப்பேட்டை ஜெயராமன் தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் முன்னதாக கோடம்பாக்கத்தில் வசிந்து வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டெய்லர் மணிகண்டன் என்பவருக்கும் நிரோஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் வீட்டில் உல்லாசமாக இருந்த போது வீட்டின் உரிமையாளர் கதவை பூட்டி , கணவருக்கு தகவல் சொல்லிவிட்டதால், அப்போது இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

Also Read: குளியல் வீடியோவை படம்பிடித்து, டார்ச்சர் செய்த கணவர்.. போலீஸில் சொல்லி கம்பி எண்ண விட்ட மனைவி

இதனையடுத்து உறவினர்கள் சேர்ந்த பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீண்டும் சைதாப்பேட்டையில் குடியமர்த்தியுள்ளனர். அதன் பின்னரும் நிரோஷாவிற்கு மணிகண்டன் உடன் கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் கோதண்டபாணி வீட்டுக்கு கள்ளக்காதலன் மணிகண்டன் அரிவாளுடன் வந்துள்ளார்.வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த கோதண்டபாணியின் கழுத்துப்பகுதியில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விடுகிறார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கோதண்டபாணி சம்பவம் இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து விட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கு உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் கோதண்டபாணி மனைவி நிரோஷாவை பிடித்து சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கள்ளகாதலுக்கு தடையாக உள்ள கணவர் கோதண்டபாணியை கொலை செய்ய கள்ளகாதலன் மணிகண்டனும், மனைவி நிரோஷாவும் திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. இரவு நேரத்தில் 2வது மாடிக்கு மணிகண்டன் மேலே ஏறி வர நிரோஷா கதவை திறந்து வைத்துள்ளார். பின்னர் கோதண்டபாணி தூங்கும் இடத்தை மணிகண்டனுக்கு காட்டிவிட்டு, நிரோஷா தூங்குவது போல் நடித்து கொண்டு தூங்கிவிட்டார்.

பின்னர் ஏற்கனவே போட்ட திட்டத்தின் படி இரவு 1 மணிக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த கோதண்டபாணி கழுத்தில் வெட்டி விட்டு மணிகண்டன் தப்பியோடி விட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தகவல் தெரிந்து வந்த காவல்துறையிடம் தன்னுடைய கணவரை யாரோ கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டதாக நிரோஷா நாடகமாடி உள்ளார்.

Also Read: வருங்கால கணவருடன் தனிமையில் சந்திப்பு.. செவிலியருக்கு பாலியல் வன்கொடுமை - ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இருவருக்கும் கள்ள தொடர்பு இருப்பதை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் மனைவி துணை இல்லமால் கொலை நடந்திருக்காது என்ற அடிப்படையில் தொடர்ந்து நிரோஷாவிடம் நடத்திய விசாரணையில் , கள்ளகாதல் உடன் இணைந்து கணவனை கொலை செய்ய போட்ட திட்டத்தை ஒப்புகொண்டு விட்டார்.
இதனையடுத்து மனைவி நிரோஷாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.கொலை செய்து விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் டெய்லர் மணிகண்டனை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கள்ளகாதலன் மணிகண்டன் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: