Home /News /tamil-nadu /

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பி.எஃப் போலீசார் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆர்.பி.எஃப் போலீசார் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தினர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் எப்பொழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு என்பதால் ரயில் சேவை இந்தியா முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சென்னையில் உள்ள சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் ஆர்.பி.எஃப், டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஆர்.பி.எஃப் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் சோதனை நடத்தினர்.

Also read: சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற எஸ்.வீ.சேகரின் ஆசையை அரசு நிறைவேற்றும் - அமைச்சர் ஜெயக்குமார்

சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.எஃப் டி.எஸ்.பி ராஜு, ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் வருவதில்லை. எனினும்,  ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்கள் பாதுகாப்புத் தன்மையை கருதி சோதனையிடுவது அவசியம். அதனடிப்படையிலேயே தற்போது சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி கொண்டு சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
Published by:Rizwan
First published:

Tags: Chennai egmore, Independence day

அடுத்த செய்தி