முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னையில் வங்கி ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி

சென்னையில் வங்கி ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி

ஏடிஎம் மெஷினில் வங்கி காவலாளி இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏடிஎம் மெஷினில் வங்கி காவலாளி இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏடிஎம் மெஷினில் வங்கி காவலாளி இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

    சென்னை ராயபுரத்தில் இந்தியன் பேங்க் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை ராயபுரத்தில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில் நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் ஏடிஎம் மெஷின் பகுதிக்கு வந்த மர்ம நபர் கல்லால் அடித்து மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார். ஏடிஎம் மெஷினில் நடக்கும் கொள்ளை சம்பவத்தை தடுப்பதற்காக அலாரம் வைக்கப்பட்டிருக்கும்.

    ஏடிஎம் இயந்திரத்தில் இருக்கும் அலாரம் ஒலி எழுப்பாமல் இருப்பதற்காக இயந்திரத்தின் பின்னால் உள்ள கேபிள் வயர்களை அந்த நபர் துண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மும்பையில் உள்ள நிசான் எலக்ட்ரானிக் நிறுவனத்தினருக்கு தகவல் சென்றுள்ளது.

    இதனை அறிந்து இந்தியன் பேங்க் ஏடிஎம் செக்யூரிட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இந்தியன் பேங்க் மேலாளர் மற்றும் செக்யூரிட்டி உடனடியாக ராயபுரம் வந்து பார்த்த பொழுது ஏடிஎம் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    Read More : தமிழகத்தை வளர்ச்சியின் குறியீடாக கொண்டு செல்வதே எனது இலக்கு - மு.க.ஸ்டாலின்

    இதுகுறித்து ராயபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்தகவலறிந்து வந்த ராயபுரம் போலீஸார் சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Must Read : தமிழகத்தில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரிப்பு

    இந்நிலையில் ஏடிஎம் மெஷினில் வங்கி காவலாளி இல்லாததால் கொள்ளை முயற்சி நடந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட  சேலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 61) என்பவரை கைது செய்து புழல் சிறையிலடைத்தனர்.

    First published: