பட்டப்பகலில் நடந்த கொடூரம் - தொழில் போட்டியால் நண்பராலேயே கொலைசெய்யப்பட்ட ரியல் எஸ்டேட் தொழிலதிபர்..

Youtube Video

திருவள்ளூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபர் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தொழில் போட்டி மற்றும் கள்ளக்காதலால் படுகொலை செய்த நண்பர் உள்ளிட்ட 5 பேர் சிக்கியது எப்படி?

 • Share this:
  சென்னை திருவொற்றியூர் அம்சா தோட்டத்தைச் சேர்ந்தவர் 36 வயதான சரவணன். மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்தார். வெள்ளிக்கிழமை காலை, தனது இருசக்கர வாகனத்தில், பொன்னேரியில் உள்ள தனியார் கன்டெய்னர் முனையம் அருகே சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர்.

  அவர்களின் கைகளில் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைப் பார்த்த சரவணன் எச்சரிக்கை அடைந்து  வாகனத்தை போட்டு விட்டு ஓடியுள்ளார். மர்ம நபர்கள் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

  கீழே விழுந்த சரவணன் எழுந்து அமர்ந்து உயிருக்குப் போராடிய காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் எடுத்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஒருவரும் முன்வராத நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி அதில் ஏற்றிச் சென்று பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். பொன்னேரி காவல்துறையினர் வழக்கு பதிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மகேஷ், சண்முகம், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டியில் சரவணன் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

  திருவள்ளூர் மாவட்டம் ஏலியம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ். மீஞ்சூர், பொன்னேரியில் செல்போன் கடை நடத்தி வந்தார். 2 கொலை வழக்குகளில் சிக்கிய பின்னர் ஸ்ரீ பெரும்புதூரில் தங்கியிருந்து தனியார் நிறுவனங்களில் ஒப்பந்தம் மூலம் தொழில் மேற்கொண்டு வந்தார்.

  மேலும் படிக்க...திண்டுக்கல்: திமுக பிரமுகர் மீது மிளகாய்பொடி தூவி வெட்டிக்கொலை.. 11 பேர் கைது.. நண்பனே கொலைசெய்யத் துணிந்தது எப்படி?  பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பியவர், சரவணன் உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இந்த நிலையில் தான், தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக சரவணனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அவரை தனது நண்பர்களுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார் மகேஷ் என்கின்றனர் போலீசார். சரவணனுக்கும் மகேஷுக்கும் எதனால் பகை ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

   

  ரியல் எஸ்டேட் தொழில் பார்த்து வந்த நபர், தனது நண்பராலேயே ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
  Published by:Vaijayanthi S
  First published: