சென்னை ஆவடி பகுதியில் இளைஞரை மறித்து கூகுள் பே மூலம் பணத்தை நூதனமாக கொள்ளையடித்த மூவரை போலீஸார் கைது செய்தனர்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் வீட்டில் திருடிவிட்டு திரும்பும்போது சக கூட்டாளிகளிடம் போலீஸ் கிட்ட இருந்து தப்பிக்கணும்னா வாசல் தாண்டுனதும் மிளகாய் பொடியை போட்டு வரணும்னு… கூறுவார். மறுநாள் காலையில் வடிவேலு வீட்டுக்கே போலீஸ் அரெஸ்ட் பண்ண வந்திடும். எதுக்கு சார் அரெஸ்ட் பண்ண வந்தீங்கன்னு வடிவேலு கேட்பார். ஐஜி வீட்டுல திருடுனா அரெஸ்ட் பண்ணாம அவார்டா குடுப்பாய்ங்கன்னு போலீஸ்காரர் கேட்பார்.
என்ன சார் ஆதாரம் இருக்குன்னு வடிவேலு கேட்க. கீழ பாருன்னு போலீஸ்காரர் கூறுவார். மிளகாய்பொடி இருக்கும். திருடுன வீட்டுல இருந்த வடிவேலு வீடு வரைக்கும் மிளகாய்பொடி தூவியிருப்பாங்க. இப்படியான ஒரு சம்பவம் தான் சென்னையில நடந்திருக்க என்ன இந்த வழிப்பறிதிருடர்கள் மிளகாய்பொடி தூவவில்லை மாறாக கூகுள் பே நம்பர் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டனர்.
Also Read: கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?
சென்னை குன்றத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 24). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக இவர் பணி முடிந்து நேற்று மாலை பூவிருந்தவல்லிக்கு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றபோது ஆவடி அடுத்துள்ள ஆயில்சேரி பகுதியில் ஒரு டிப் டாப் ஆசாமி ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார்.
அஜித்குமார் அந்த நபரை ஏற்றிக்கொண்டு சில கிலோமீட்டர் வந்துள்ளார். அப்போது சாலையில் இரண்டு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். வண்டியை நிறுத்தியதும் திடீரென இருவர் வந்து சூழ்ந்துக்கொண்டனர். லிப்ட் கேட்டு வந்த நபர் உட்பட மூவரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கி அணிந்திருந்த மோதிரம் மற்றும் ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயின் செல்போனை பறித்த கும்பல் கூகுள் பே ஆஃப் மூலம் தங்களது அக்கவுண்டுக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். அவரும் பயத்தில் கூகுள் பே பாஸ்வேர்டை கூற அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13000 தங்களது வங்கி கணக்கு மாற்றிக்கொண்டனர்.
Also Read: கூகுள் பே கொள்ளையர்கள்.. ஆவடியில் லிப்ட் கேட்பது போல் இளைஞரை தாக்கி கைவரிசை
இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் நேற்று இரவு 10 மணிக்கு தனியார் நிறுவன மேலாளர் அஜித் குமார் புகார் அளித்தார். கூகுள் பேவில் பணம் அனுப்பிய எண், வங்கிக்கணக்கை கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். வழிப்பறியில் ஈடுபட்ட 3பேரை 7மணி நேரத்தில் கைது செய்த போலீஸார். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷிடம் ஒப்படைத்தனர்.
கூகுள் பே பண பரிமாற்றம் செய்த வங்கி கணக்கு மூலம் போலீஸார் கொள்ளையர்களை எளிதாக அடையாளம் கண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 24) , OLA ஆட்டோ ஓட்டுனர் ஹரிதாஸ்( வயது 23) அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனசேகர் (வயது 23) ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து செல்போன், பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மூவரையும் பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பொன்னேரி கிளை சிறையில் இன்று மாலை அடைக்க உள்ளனர்.
செய்தியாளர்: கன்னியப்பன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Google pay, Mobile phone, Money, Robbery