சென்னை: குடிபோதையில் இருந்த ரவுடி வெட்டிக்கொலை - 3 பேர் கைது

இந்த வழக்கை விசாரித்த அம்பத்தூர் போலீசார், பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜ்குமார், நிஜாம் மொய்தீன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Web Desk | news18
Updated: March 15, 2019, 11:11 AM IST
சென்னை: குடிபோதையில் இருந்த ரவுடி வெட்டிக்கொலை - 3 பேர் கைது
கோப்புப் படம்
Web Desk | news18
Updated: March 15, 2019, 11:11 AM IST
சென்னை அம்பத்தூரில் அண்ணன் கொலைக்கு பழிவாங்க திட்டமிட்ட தம்பி வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில், ரவுடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சத்யா என்ற செங்குட்டுவன். இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அண்மையில் புளியந்தோப்பைச் சேர்ந்த ராதா என்ற ரவுடியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த சத்யா,  கடந்த புதன்கிழமை இரவு அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே நண்பர்களுடன் மது குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று, சத்யாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் சாய்ந்த சத்யா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அங்கு வந்த போலீசார், ரவுடி சத்யாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையில் இறங்கினர். அப்போதுதான் ரவுடி சத்யாவின் கொலைக்கான பின்னணி தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சத்யாவின் அண்ணன் ஆடலரசனை கடந்த 2014-ம் ஆண்டு ஒரு கும்பல் கொலை செய்தது.

இந்நிலையில், அண்மையில் ராதா என்பவரது கொலை வழக்கில் ஜாமின் பெற்று வெளியே வந்த ரவுடி சத்யா, வேப்பம்பட்டில் உள்ள 2-வது மனைவி வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது, அண்ணன் ஆடலரசன் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க சத்யா திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் தனது கள்ளக்காதலியை சத்யா பார்க்கச்சென்றார். சில நண்பர்களை ரயில் நிலையம் அருகே வரவழைத்து அவர்களுடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது திடீரென அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல், சத்யாவை சுற்றிவளைத்து, சரிமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இந்த வழக்கை விசாரித்த அம்பத்தூர் போலீசார், பெரம்பூர் பகுதியில் பதுங்கியிருந்த ராஜ்குமார், நிஜாம் மொய்தீன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading...
Also see... தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் சென்னை சிறுவன்!
First published: March 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...