பெயிண்டர் தற்கொலை - சென்னை புழல் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

வீட்டை காலி செய்யுமாறு போலீசை வைத்து உரிமையாளர் தாக்கியதால் தீக்குளித்த வாடகைக்கு குடியிருந்த நபர் உயிரிழந்தார். வாடகைதாரரை தாக்கியதாக எழுந்த புகாரில் புழல் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பெயிண்டர் தற்கொலை - சென்னை புழல் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
புழல் ஆய்வாளர் பென்சாம்
  • News18
  • Last Updated: August 3, 2020, 8:42 AM IST
  • Share this:
சென்னை புழலை அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வீட்டில், சீனிவாசன் என்ற பெயிண்டர் குடியிருந்து வந்தார். ஊரடங்கால் வருமானம் இல்லாத நிலையில், சீனிவாசன் வாடகை கொடுக்கவில்லை. இதனால், ராஜேந்திரன் பலமுறை வீட்டை காலி செய்யக்கூறியும் சீனிவாசன் அதனை மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராஜேந்திரன் அளித்த புகாரை தொடர்ந்து, நேற்று முன் தினம் மாலை புழல் காவல் நிலைய போலீஸார் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, காவல் ஆய்வாளர் சீனிவாசனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் நள்ளிரவில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

85 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னதாக சீனிவாசன் அளித்த வாக்குமூலத்தில் காவல் ஆய்வாளர் பென்சாம் தன்னை தாக்கியதாகக் கூறியுள்ளார்.


இதனை அடுத்து, ஆய்வாளர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் பென்சாம் 2018 ம் ஆண்டு பாலியல் புகாருக்கு உள்ளாகி துறை ரீதியான நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: August 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading