பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மை ஊற்றி அழிப்பு

பெயர் பலகை

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்ற பெயர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் பலகை மீது கருப்பு மை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்று இருந்த பெயர் தற்போது கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டு பலகை வைக்கப்பட்டிருந்தது. பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின், வைகோ, வீரமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்து அறிக்கையில், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க என்று எச்சரித்தார்.

  இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையில் இந்த பெயர் கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்றே நீடித்து வருகிறது. தமிழக அரசின் பதிவேட்டில் மட்டும் ஈவேரா சாலை என்று மாற்றப்பட்டு இருப்பதாகவும் என்று தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில் பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை மீது மர்ம நபர்கள் சிலர் கருப்பு மை ஊற்றி அழித்து உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக திராவிட கழகத்தினர் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் கருப்பு மை ஊற்றி அழித்தது நாங்கள் தான் என்று பதிவிட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: