ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாதவரம் பார்க்கிங் யார்டில் வடமாநில ஓட்டுநர் வெறிச்செயல் - லாரி ஏறியதில் மூவர் பலி

மாதவரம் பார்க்கிங் யார்டில் வடமாநில ஓட்டுநர் வெறிச்செயல் - லாரி ஏறியதில் மூவர் பலி

செங்குன்றம் சம்பவம்

செங்குன்றம் சம்பவம்

Chennai | சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் தனியார் லாரி பார்க்கிங் இடம் உள்ளது. இங்கு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த கமலகண்ணன், நவீன் மற்றும் வடகரை பகுதியைச் சேர்ந்த குமரன் மேலும் சில லாரி டிரைவர்கள் நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டிருந்தனர். பார்க்கிங் யார்டில் மதுஅருந்திய போது அங்கிருந்த வடமாநில லாரி ஓட்டுநர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

  ஆத்திரமடைந்த வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் லாரியை பின்னோக்கி எடுத்த போது பின்னாலிருந்த கமலக்கண்ணன் உட்பட மூவர் மீது லாரி ஏறியது. இதில் கமலக்கண்ணன் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த நவீன் மற்றும் குமரன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் மருத்துவனையில் குமரன் உயிரிழந்தார். படுகாயமடைந்த நவீன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் தனியார் யார்டில் குவிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்த வடமாநில லாரிகளை தாக்கினர். இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு விரைந்த செங்குன்றம் காவல்துறையினர் கமலகண்ணன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் காவல்துறைனயினர் தப்பியோடிய வடமாநில லாரி ஒட்டுநர்களான கிரிஷ் குமார் கண்ணையா, லால் சிங் இருவரையும் கைது செது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Chennai, Crime News, Death, Tamilnadu