சென்னை - மைலாப்பூர், மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..

சென்னை - மைலாப்பூர், மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை..

(கோப்புப்படம்)

சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

 • Share this:
  சென்னை, மைலாப்பூர், மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருண்ட மேகத்துடன் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், அரியலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் தெரிவித்திருந்தது.  அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இதன் காரணமாக, அக்டோபர் 19-ம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபி கடல் பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.அக்டோபர் 20 வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 21, 22 தெற்கு மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அக்டோபர் 23-ம் தேதி தெற்கு மகாராஷ்டிரா, கோவா,கர்நாடகா கடலோர பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
  Published by:Gunavathy
  First published: