Ramadan | ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிகாலை வரை திறந்திருந்த கடைகள்

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னையின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் பொருட்களை வாங்க நேற்று இரவு நேரத்தில் அதிக அளவில் வந்து சென்றனர்.

Ramadan | ரம்ஜான் பண்டிகையை ஒட்டி அதிகாலை வரை திறந்திருந்த கடைகள்
கோப்புப் படம்
  • Share this:
தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை திங்கட்கிழமையான இன்று கொண்டாடப்படும் என தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் அயூப் அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று இரவு முதல் விடியற்காலை வரை சென்னையின் பல இடங்களில் இஸ்லாமியர்கள் பொருட்களை வாங்க குவிந்தனர்.

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பாரிமுனை புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இரவு நேரத்திலும் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் புத்தம் புது ஆடைகள் வாங்கி சென்றனர்.

உணவகங்களிலும் அதிகளவில் இஸ்லாமியர்கள் சென்று உணவருந்தினர். திருவல்லிக்கேணி சுற்றியுள்ள பகுதிகளில் திருவிழா கூட்டம் போல் காட்சியளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Also see...




First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading