வறுமையில் வாடும் இஸ்லாமியர்களுக்கு இலவச பிரியாணி வழங்கிய காஜா பாய் டிபன் கடை

100 ஆண்டுகள் பழமையான காஜா பாய் கடை சார்பில் வறுமையில் வாடும் இஸ்லாமியர்களுக்கு இலவச பிரியாணி வழங்கப்பட்டுள்ளது

வறுமையில் வாடும் இஸ்லாமியர்களுக்கு இலவச பிரியாணி வழங்கிய காஜா பாய் டிபன் கடை
தயாராகும் பிரியாணி
  • Share this:
சென்னை திருவல்லிக்கேணியில் நூறுஆண்டுகளுக்கு மேலாக காஜா பாய் டிபன் கடை பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. நோய் தொற்று பரவும் இந்த அபாயமானகால கட்டத்தில் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இறைச்சி கூட வாங்க முடியாமல் ரம்ஜானை கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் அப்படி ஒரு நிலை இருக்கக்கூடாது என்பதற்காக காஜா பாய் டிபன் கடை சார்பில் 200 பேருக்கு பிரியாணி தயாரிக்கப்பட்டது இலவசமாக வழங்கப்பட்டது.
35 கிலோ கோழி இறைச்சி 50 கிலோ அரிசி கொண்டு 200 பேருக்கு பிரியாணி தயாரித்து வறுமையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏழைகளுக்கும் பிரியாணி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


இதற்காக நேற்று கடைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு சமையல்காரர்கள் வைத்து சமையல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி நாள்தோறும் சென்னை மாநகராட்சிக்கு தகவல் அளித்து தினமும்  1000 பேருக்கு உணவு வழங்கி வருவதாக கூறும் அவர்கள் சாலை பகுதியில் இருக்கும் வயதானவர்களுக்கும் உணவு அளித்து வருவதாகவும் காஜா பாய் டிபன் கடை உரிமையாளர் நூறுதீன் கூறுகிறார்.

Also see...

First published: May 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading