ரமலான் 2019: சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரியுமா?

சஹர் உணவு வீட்டில் இல்லாதவர்களுக்கு எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ரமலான் 2019: சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரியுமா?
உணவு
  • News18
  • Last Updated: May 10, 2019, 8:21 AM IST
  • Share this:
சென்னையில் சஹர் உணவுகள் எங்கெங்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். 

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலையில் நோன்பு தொடங்கி மாலையில் முடிப்பது வழக்கம். காலையில் சூரியன் வரும் முன்னரே சாப்பிட வேண்டும். அதேபோல மாலையில் சூரியன் மறையும் வேளையில் சாப்பிட வேண்டும். இடையில் தண்ணீர்க் கூட அருந்த மாட்டார்கள். 

இதில் வீட்டில் இருந்து வேலைக்கு செல்பவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் நோன்புக்கான உணவுக் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால ஹாஸ்டலில் உள்வர்களுக்கும் தனியாக மேன்ஷனில் தங்கி வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த உணவு கிடைப்பது கடினம். அதிலும் அதிகாலையில் 4 மணிக்கு உணவு கிடைக்குமா? என்பது தெரியாது.


காலையில் நோன்பு தொடங்கும்போது சாப்பிடும் உணவு சஹர் எனப்படும். மாலையில் நோன்பு முடிக்கும்போது சாப்பிடும் உணவு இஃப்தார் எனப்படும் . பொதுவாக இந்த இஃப்தார் உணவு என்பது எளிதாக கிடைக்கும். ஆனால் சஹர் உணவு எளிதில் கிடைக்காது. வீட்டில் இல்லாதவர்களுக்கு இந்த சஹர் எங்கு கிடைக்கும் என்பதை பற்றிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

சென்னையில் சஹர் உணவு கிடைக்கும் இடங்கள்:

1. அடையார் - ஹோட்டல் டாப்பர் (Hotel Topper)அடையார் பஸ் டிப்போ அருகே உள்ள மஸ்ஜித் வளாகத்தில் சஹார் உணவு கிடைக்கிறது. காலை 3 மணி முதல் 4 மணி வரை கிடைக்கும்2. கிண்டி- ஆலந்தூர் மஸ்ஜித் வளாகம் ஹேடிஸ், எம்.கே.என் சாலை, ஆலந்தூர். 3 மணிமுதல் 4.30 மணி வரை உணவு கிடைக்கும். மாலையில் 21,23,25,27 & 29 ஆகிய தேதிகளில் கிடைக்கும்.

3. கோடம்பாக்கம்- கோடம்பாக்கம் பாலம் அருகே உள்ள ஹோட்டல் உடுப்பியில் சஹர் உணாவுகள் கிடக்கிறது.

4. டி.நகர் - ஹோட்டல் விருதுநகரில் ரமலான் முழுவதும் சஹர் உணாவு கிடைக்கும். நம்பர் - 77, ஜி.என் செட்டி ரோடு, பனகல் பார்க், டி.நகர்.

5. கே.கே. நகர் - பனாமா கிட்சன் ஹோட்டலில் இலவசமாக காலை 3 மணி முதல் 4 மணி வரை சஹர் உணவு கிடைக்கும்.

6. திருவல்லிக்கேணி - ஹோட்டல் சஹரில் ரமலான் முழுவதும் சஹர் உணவு கிடைக்கும்.

7.சூளைமேடு - பாஷா தெருவில் உள்ள மஸ்ஜித் மஸ்ஜித்-ல் ரமலான் முடியும் கடைசி 10 நாட்களுக்கு சஹர் உணவுகள் வழங்கப்படும்.

8. ரமலான் முழுவதும் தரமணி தவ்ஹீத் பள்ளிவாசலில் சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சோழிங்கநல்லூர் முகம்மது சதாக் கல்லூரிக்கு எதிராக உள்ள மஸ்ஜித்-ல் ரமலான் முழுவதும் சஹர் கிடைக்கும்.

10. அரும்பாக்கத்தில் உள்ள எம்.எம்.டி.ஏ. மஸ்ஜித்- ல் சஹர் உணவு கிடைக்கும்.

Also see... உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்! 

கொளுத்தும் வெயிலுக்கு ஜில் ஸ்னாக்ஸ்...! குளிர்ச்சி தரும் காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்!  

நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன? 

Also see... 
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading