ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தத்ரூபமாக நடந்த பாதுகாப்பு ஒத்திகை...!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தத்ரூபமாக நடந்த பாதுகாப்பு ஒத்திகை...!

  • News18
  • 1 minute read
  • Last Updated :

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. 

சென்னையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தீவிரவாத தாக்குதல்களை எதிர் கொள்ளும் வகையில் முக்கியமான இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை அவ்வபோது நடத்தப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையில், கமாண்டோ வீரர்கள், சென்னை காவல்துறையின் அதிரடிப்படை வீரர்கள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவலர்கள் பங்கேற்றனர்.

அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தீவிரவாதி ஒருவரை கடந்தி செல்ல, மருத்துவமனைக்குள் 5 தீவிரவாதிகள் துப்பாகி உடன் நுழைந்து, போலீசாரை சுட்டுவிட்டு, சிகிச்சை பெற்று வரும் தீவரவாதியை கடத்திப்செல்வதை போல் கமாண்டா படையினர் ஒத்துகை செய்தனர்.

பின்னர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கமாண்டோ துணை ஆணையர் சோலை ராஜன் தலைமையில் 35க்கும் மேற்பட்ட வீரர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து தீவிரவாதிகளை சுட்டு கொன்று விட்டு, பிணை கைதிகளை மீட்டு மருத்துவமனையை கட்டுக்குள் கொண்டு வருவது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

ஒத்திகையின்போது, காவலர்களும், தீவிரவாதிகளும் துப்பாக்கிகளில் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி சுட்டனர். இந்த ஒத்திகை தத்ரூபமாக நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Chennai