காவி சாயம் கருத்து - மீண்டும் பேட்டியளித்த ரஜினிகாந்த்

காவி சாயம் கருத்து - மீண்டும் பேட்டியளித்த ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
  • News18
  • Last Updated: November 8, 2019, 12:55 PM IST
  • Share this:
வள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரியதாக்குகின்றன; நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன் என்று ரஜினிகாந்த் மீண்டும் போயஸ் கார்டனில் பேட்டியளித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டன் வீட்டில் இன்று காலை ரஜினிகாந்த் பேட்டியளிக்கையில், திருவள்ளுவருக்கு காவிச்சாயம் பூசியது போல என் மீது பாஜக சாயம் பூச முயற்சி நடக்கிறது என்று கூறியிருந்தார்.

மேலும், பாஜகவின் தலைவராக தன்னை நிறுவ முயற்சி நடக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போயஸ் கார்டனில் மீண்டும் ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.


“என் மீது காவிச்சாயம் பூச முயற்சிப்பது இந்த கால அரசியலில் சகஜம். நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். இதனை ஊடகங்கள் பெரியதாக்குகின்றன.

பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை இருக்கிறது. அரசு அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன்.

சரியான தலைமை இல்லாமல் தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அயோத்தி தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.” என்று கூறினார். 
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்