• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மீண்டும் மிரட்டப்போகும் கனமழை! 4 மாவட்டங்களில் வெளுத்தெடுக்க வாய்ப்பு

மீண்டும் மிரட்டப்போகும் கனமழை! 4 மாவட்டங்களில் வெளுத்தெடுக்க வாய்ப்பு

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை - ஆந்திரா நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது

  • Share this:
    சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து சென்னை - ஆந்திரா நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. காலை நிலவரப்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 170 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது. இது, இன்று மாலை வட தமிழகம் - ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே விடாது பெய்யும் மழையால் தமிழக மக்கள் குறிப்பாக சென்னையில் வசிப்போர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த 2015 பெரு வெள்ளத்திற்கு அடுத்தபடியாக, சென்னை மக்களை தொடர் மழை முடக்கியுள்ளது. இந்நிலையில் இன்று மாலை மீண்டும் கனமழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகத்தை பொறுத்து, எப்போது கரையை கடக்கும் என்ற விவரம் தெரியவரும். இதனால், வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இடைவேளையின்றி மழை பெய்து வருவதுதான் சென்னையில் இந்த அளவுக்கு தண்ணீர் தேங்குவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நகரின் மையப்பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    சென்னையில் அதிகபட்சமாக எண்ணூர் துறைமுகம் பகுதியில், 14.6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எம்.ஆர்.சி.நகரில் 12 சென்டிமீட்டர் அளவுக்கும், வில்லிவாக்கத்தில் 10 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது. தரமணியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: