முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்.. வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்

தண்ணீரில் தத்தளிக்கும் சென்னை புறநகர் பகுதிகள்.. வீட்டிற்குள் முடங்கிய பொதுமக்கள்

ஆவடி

ஆவடி

ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் அதிகாலை முதல் நீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  • Last Updated :

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளநீர் சாலையில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்த நிலையில் நேற்று காலை முதல் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது.  நேற்று இரவு முதல் தற்போது வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகள் மட்டுமின்றி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக ஆவடி பூந்தமல்லி சாலை சிடிஎச் சாலை போன்ற பிரதான சாலைகளில் மழைநீர் அதிகளவில் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

அதேபோல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளான  ஸ்ரீராம் நகர் பருத்திப்பட்டு வசந்தம் நகர் பட்டாபிராம், கோபாலபுரம், சோழம்பேடு, கோவில்பதாகை போன்ற பல்வேறு பகுதிகளில் குடியிருப்பை மழைநீர் சுமார் 3 அடி அளவிற்கு  சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

ஆவடியில் மழைநீர் வெளியேற போதிய வழிவகை இல்லாத காரணத்தினால் கடந்த வட கிழக்கு பருவ மழை முதல் தற்போது வரை இப்பகுதி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள்  அதிகாலை முதல் நீர் தேங்கி உள்ள பகுதிகளை ஆய்வு செய்த நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் ராட்சத டீசல் இன்ஜின்கள் கொண்டு வெள்ள நீரை வெளியேற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்: கன்னியப்பன்

First published:

Tags: Chennai, Chennai rains, Heavy Rainfall