• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னை மழை

சென்னை மழை

சென்னை மற்றும் காஞ்சிபுரம்,  திருவள்ளூர் செங்கல்பட்டு பெல்ட்டில் சராசரியாக 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் சில நிலையங்களில் 200 மி.மீ. மழ பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
    சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்துவருகிறது. சென்னை மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் ஜான் , மோசமான நிலையை கடந்துவிட்டதாகவும்,  அவ்வபோது மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுபெற்று தற்பொழுது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.  ஆந்திரமாநில ஸ்ரீஹரிகோட்டா வட சென்னைக்கு இடைப்பட்ட  பகுதியில் இது கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக நேற்று இரவு தொடங்கி சென்னையில் சுமார் 15 மணி நேரத்துக்கும் மேலாக தொடர் மழை பெய்துவருகிறது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியுள்ளது. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டுள்ளது.



    இந்நிலையில், மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக ஊடக பக்கத்தில், மோசமானது முடிந்துவிட்டது. அவ்வப்போது மழை பெய்யும். மாலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி வடசென்னை-ஸ்ரீஹரிகோட்டா பகுதியை கடக்கும் வரை காற்று வீசும். சென்னை மற்றும் காஞ்சிபுரம்,  திருவள்ளூர் செங்கல்பட்டு பெல்ட்டில் சராசரியாக 150 மி.மீ மழை பதிவாகியுள்ளது மற்றும் சில நிலையங்களில் 200 மி.மீ. மழ பதிவாகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சென்னையில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்கவும் - வானிலை மையம் எச்சரிக்கை


    தாம்பரம், சோழவரம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் 200 மி.மீட்டர் அளவை கடந்து மழை பதிவாகியுள்ளதகவும் கும்மிடிபூண்டி, ரெட் ஹில்ஸ், மாமல்லபுரம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், மைலாபூர் டிஜிபி அலுவலகம், பெரம்பூர், எம்.ஆர்.சி.நார் ஆகிய பகுதிகளில் 150 மி.மீ.க்கு மேல் மழை பதிவாகி உள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: