Home /News /tamil-nadu /

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

School leave

School leave

இன்று மாலை புயலுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Last Updated :
    தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், இன்று மாலை புயலுடன் கூடிய கனமழை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றும் நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தை பொறுத்து மற்ற மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Abdul Mushtak
    First published:

    Tags: School Leave

    அடுத்த செய்தி