ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. விலகும் மழை மேகம்.. வானிலை அப்டேட் சொன்ன வெதர்மேன்!

சென்னை மக்களுக்கு நல்ல செய்தி.. விலகும் மழை மேகம்.. வானிலை அப்டேட் சொன்ன வெதர்மேன்!

சென்னை மழை

சென்னை மழை

மழை நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (1-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  குஜராத் பாலம் விபத்து.. பதைப்பதைக்கும் காட்சிகள் வெளியானது - பலி எண்ணிக்கை 134ஆக உயர்வு

  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, , புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது'' எனக்கூறப்பட்டுள்ளது.

  இந்நிலையில் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வானிலை அறிக்கை பதிவிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் நாளை முதல் இதர மாவட்டங்களுக்கு மழை நகரத்தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், '' சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை தொடரும். இரவு முதல் மெல்ல மெல்ல மழை குறையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  அதற்கு முந்தைய பதிவில், '' மேகக் கூட்டங்கள் நெருங்கி வருவதை பார்க்கும்போது சென்னைக்கு இன்று நாள் முழுவதும் மழை இருக்கும். வட சென்னையை விட தென் சென்னைக்கு மழை அதிகமாக இருக்கும். புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கும் மழை இருக்கும். இன்று இல்லையென்றாலும் நாளை இருக்கும். நல்ல செய்தி என்னவென்றால், மழை நாளை முதல் மற்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்கிறது. இதனால் நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும்.இன்று நேற்று மழை அளவைவிட நாளை சென்னையில் மழை அளவு குறைவாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் மழை குறையும் என்பதால் சென்னை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


  Published by:Murugadoss C
  First published:

  Tags: Chennai Rain, Weather News in Tamil