• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிவேகத்தில் வீசும் காற்று... சென்னை மக்களுக்கான அடுத்த அலெர்ட்!

அதிவேகத்தில் வீசும் காற்று... சென்னை மக்களுக்கான அடுத்த அலெர்ட்!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்

  • Share this:
    சென்னையில் இன்று மாலை வரை மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மிக அத்தியாவசிய தேவைகள் நீங்கலாக, பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை மற்றும் அதன் சுற்று மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்மழை பெய்து வருகிறது. இடைவேளையின்றி பெய்து வரும் மழையால், மழைநீர் வெளியேறுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

    மழை நீரை வெளியேற்றுவதற்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தொடர் பணியாற்றி வருகின்றன. இருப்பினும், இயற்கையின் வேகத்திற்கு அரசு எந்திரங்கள் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை, தொடர் மழையின் பாதிப்பு உணர்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை மக்களுக்கு புதிய எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதன் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியிருப்பதாவது-

    நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 480 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு வடக்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்பகுதியில் சென்னைக்கு அருகில் இன்று மாலை கடந்து செல்லும்.

    இதன் காரணமாக இன்று மாலை வரை பலத்த காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் வீசக்கூடும். மழையை பொருத்தவரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

    தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் தாம்பரத்தில் 232.9 மி. மீட்டர், சோழவரத்தில் 220 மில்லி மீட்டர், எண்ணூரில் 205 மில்லி மீட்டர், கும்மிடிப்பூண்டியில் 184 மில்லிமீட்டர், செங்குன்றத்தில் 180 மில்லி மீட்டர், நுங்கம்பாக்கத்தில் 158.5 மில்லிமீட்டர், மீனம்பாக்கத்தில் 116 மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: