சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து

News18 Tamil
Updated: July 14, 2019, 10:07 AM IST
சென்னையில் இன்று மின்சார ரயில்கள் ரத்து
கோப்புப்படம்
News18 Tamil
Updated: July 14, 2019, 10:07 AM IST
பராமரிப்பு பணி காரணமாக 29 மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மணி, மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35 மணி, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான ரத்தான ரயில் சேவை விபரம்.


பயணிகளின் வசதிக்காக கடற்கரை-தாம்பரம்-கடற்கரை இடையே 8 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11, 11.45 மணி, மதியம் 12.10, 12.40, 1.05, 1.20, 2.05, 2.40 மணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.10, 11.30, 11.45, 12.15, 12.55, 1.35, 2, 2.35 மணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது.
Loading...
மேலும், கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மணி, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

சென்னை கடற்கறை முதல் செங்கல்பட்டு வரையிலான மின்சார ரயில் சேவையில் விபரங்கள்


இதேபோல் செங்கல்பட்டு-கடற்கரை காலை 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணி, காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...