Home /News /tamil-nadu /

சென்னையில் டி.எஸ்.பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை

சென்னையில் டி.எஸ்.பி வீட்டில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை

, சிபிசிஐடி-டிஎஸ்பி ராதாகிருஷ்ணனின் வாடகைக்கு விடப்பட்ட வீடு

, சிபிசிஐடி-டிஎஸ்பி ராதாகிருஷ்ணனின் வாடகைக்கு விடப்பட்ட வீடு

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சிபிசிஐடி-டிஎஸ்பி ராதாகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி-யாக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு சொந்தமாக கீழ்ப்பாக்கம் கார்டனில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டை மாதம் ரூபாய் 20,000-க்கு அருண் என்பவருக்கு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்தநிலையில் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் அருண் என்ற நபர் போதை பொருள் கடத்தல் வேலை செய்வதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கிலோ கணக்கில் போதைப்பொருட்களும் அதனை பேக் செய்வதற்காக பாலிதீன் பைகள், மெஷின்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் அருண் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவரை மத்திய போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பியாக இருக்கும்  ராதாகிருஷ்ணனிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்க...நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுக திரும்பினால் ஏற்றுக்கொள்வீர்களா? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்



மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாப்பு பிரிவில் சிபிசிஐடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன், பாதுகாப்பு ஆய்வாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: CBCID, Chennai

அடுத்த செய்தி