சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கிய பேருந்து சேவை

ஊரடங்கு தளர்வு காரணமாக, சென்னையில் 5 மாதங்களுக்கு பிறகு பொதுப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரிய கோயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • Last Updated: September 1, 2020, 10:58 AM IST
  • Share this:
கொரோனவை கட்டுப்படுத்த செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பொது போக்குவரத்து, கோயில் வழிபாடு போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்திற்குள்ளாக இன்றுமுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் 19,500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை, பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகள் கைகளை தூய்மைபடுத்துவதற்காக பேருந்துகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடும்பத்துடன் அதிகாலை 4 மணிக்கே குவிந்த பக்தர்கள் - போலீசார் திணறல்

பேருந்துகளில் 50% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், ஒரு இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவர். சென்னை மாநகரப் பகுதிகளில் 3300 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 5 மாதங்களாக வெறிச்சோடி போயிருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இன்று காலை முதலே மக்கள் நடமாட தொடங்கியுள்ளனர்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading