சென்னையில் ஆண் உறுப்பைத் துண்டித்து வந்த சைக்கோ கொலைகாரன் கைது!

ரெட்டெரி மேம்பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸ்லாம் பாட்ஷா என்பரின் ஆண் உறுப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துண்டித்திருந்தார்.

news18
Updated: June 12, 2019, 10:02 AM IST
சென்னையில் ஆண் உறுப்பைத் துண்டித்து வந்த சைக்கோ கொலைகாரன் கைது!
கோப்புப் படம்
news18
Updated: June 12, 2019, 10:02 AM IST
சென்னை ரெட்டேரி பகுதியில் ஆண் உறுப்பை துண்டித்து வந்த சைக்கோ கொலைகாரன் சி.சி.டி.வி காட்சிகளின் உதவியால் இன்று கைது செய்யப்பட்டான். 

கடந்த மே மாதம் 26-ம் தேதி ரெட்டெரி மேம்பாலத்தின் அடியில் படுத்திருந்த அஸ்லாம் பாட்ஷா என்பரின் ஆண் உறுப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துண்டித்திருந்தார். இதில் பலத்த காயமடைந்த அஸ்லாம் பாட்ஷா, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதே போல் கடந்த ஜூன் 3-ம் தேதி கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரும் இதே பாணியில் தாக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது போல் தாக்குதல் நடத்தும் நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரின் பதிவு கிடைத்துள்ளது.

மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் நடைபெற்ற போது, குறிப்பிட்ட ஒரு நபர் அங்கு இருந்துள்ளார். எனவே இந்தச் சம்பவத்தில் ஈடுபடும் நபர் அவர் தானா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சைகோ கொலையாளி இன்று கைது செய்யப்பட்டார்.

Also see... ஆண் உறுப்பை துண்டித்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி: அச்சத்தில் வட சென்னை வாசிகள்

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see... 
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...