தனியார் தண்ணீர் லாரி ஸ்டிரைக் வாபஸ்

News18 Tamil
Updated: August 21, 2019, 8:51 PM IST
தனியார் தண்ணீர் லாரி ஸ்டிரைக் வாபஸ்
கோப்பு படம்
News18 Tamil
Updated: August 21, 2019, 8:51 PM IST
தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

தனியார் லாரி ஒட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை கண்டித்தும், தண்ணீர் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கோரியும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தியது.


கோயம்பேட்டில் குடிநீர் வடிகால் வாரிய இயக்குநர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவகாசம் தேவை என ஹரிஹரன் கூறினார். இதனால் சுமார் 3 மணிநேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, சென்னை குடிநீர் வழங்கல் வடிகால் வாரியம் நடத்திய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஓரளவு சுமூகமாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிஜலிங்கம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்கள் லாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி உரிமத்தை மற்ற மாவட்டங்களில் உள்ள தனியார் தண்ணீர் லாரிகளுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

Loading...

First published: August 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...