சுகப்பிரசவம் வேண்டி அம்மி , உரல் பயன்படுத்திய கர்ப்பிணிகள்!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கர்ப்பமடைந்தாலே அவர்களை வேலை செய்ய விடாமல் குடும்பத்தினர் சொகுசாக பார்த்துக் கொள்கின்றனர். அதுவே அறுவை சிகிச்சைகளுக்குக் காரணம்.

news18
Updated: May 6, 2019, 3:32 PM IST
சுகப்பிரசவம் வேண்டி அம்மி , உரல் பயன்படுத்திய கர்ப்பிணிகள்!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கர்ப்பமடைந்தாலே அவர்களை வேலை செய்ய விடாமல் குடும்பத்தினர் சொகுசாக பார்த்துக் கொள்கின்றனர். அதுவே அறுவை சிகிச்சைகளுக்குக் காரணம்.
news18
Updated: May 6, 2019, 3:32 PM IST
அறுவைசிகிச்சைகள் அதிகரித்துவரும் நிலையில் சுகப்பிரசவத்தை ஊக்குவிக்கும் விதமாக நேற்று (ஞாயிறு) சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அன்னையர் தினத்தையொட்டி 'புளூம்' கருத்தரித்தல் மையம், கர்ப்பிணிகளுக்குக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது. அதில் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள் பங்கேற்றனர்.

அதில் பெண்கள் அம்மியில் மசாலா அரைப்பது, நெல் குத்துவது, தானியங்களை உடைப்பது போன்ற பாரம்பரிய வேலைகளை அங்கு ஊக்குவித்தனர். அங்கு கர்ப்பிணிகளும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தனர்.


அந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் அறுவைசிகிச்சைகளைத் தடுக்க வேண்டும் என்பதுதான். அறுவைசிகிச்சைகள் மருத்துவர்களால்தான் ஊக்கப்படுத்தப்படுகின்றன என்ற எண்ணம் தவறானது. இதுபோன்ற வேலைகளைப் பெண்கள் செய்வதில்லை என்பதால்தான் அறுவைசிகிச்சைகள் அதிகரித்துவிட்டன என 'புளூம்' மையத்தின் தலைமை மருத்துவர் கவிதா கௌதம் கூறினார்.

“இந்தியாவில் முன்பெல்லாம் சுகப்பிரசவங்கள்தான் அதிகமாக இருந்தன. உடல் உழைப்பு இல்லாமை, தவறான வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் அறுவைசிகிச்சைகள் அதிகரித்துள்ளன. மருத்துவர்கள்தான் அறுவைசிகிச்சைக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. பெண்கள் கர்ப்பமடைந்தாலே அவர்களை வேலை செய்யவிடாமல் பாதுகாக்கின்றனர். குடும்பத்தினர் தான் அதற்குக் காரணம். அதனால்தான் சுகப்பிரசவங்கள் இல்லாமல் போகின்றன. இதை ஒழிக்கும் நோக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது “ எனக் கூறினார்.

இதையும் படிக்க : 

Loading...

இரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம்... கண்டறிவது எப்படி?

இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா?
First published: May 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...