• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் உயர்வு....

சென்னையில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக் கிழங்கு விலையும் உயர்வு....

சென்னை கோயம்கேடு காய்கறி சந்தைக்கு உருளை கிழங்கு வரத்து குறைந்ததால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

  • Share this:
    சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பயிரிடப்பட்ட வெங்காயங்கள் சேதமடைந்து வரத்து குறைந்தது. இதனால் 1,000 டன் வெங்காயங்களே சந்தைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் 40 ரூபாய்க்கு விற்பனை ஆன சின்ன வெங்காயம் கிடுகிடுவென என விலை உயர்ந்து 80 ரூபாய் வரை விலை ஏற்றமடைந்துள்ளது. மேலும் மழை நீடித்தால் 100 ரூபாய் வரை விலை உயர வாய்ப்புள்ளது என்றனர் வியாபாரிகள். அதேபோல் பெரிய வெங்காயமும் 1 கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆனால் அதுவும் தற்போது விலை உயர்ந்து 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல் உருளைக் கிழங்கு விலையும் உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தினந்தோறும் சுமார் 500 டன் உருளை கிழங்கு இறக்குமதி செய்யப்படுவது வழக்கம். தற்போது உதகை, கொடைக்கானல் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், உருளை கிழங்கின் விளைச்சல் குறைந்து அதன் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தற்போது கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு வெறும் 250 டன் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. வரத்து குறைந்ததால், கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உருளை கிழங்கு தற்போது கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல் உள்ளூர் வியாபாரிகள் கடைகளில் கிலோ 75 ரூபாய்-க்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ ரூ.12, ரூ.13-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிரிடுவதில் ஆர்வம் செலுத்தவில்லை. ஆனால் இந்த ஆண்டு உருளையின் வரத்து சந்தைக்கு குறைந்து வந்ததால் அதன் விலை உயர்ந்துள்ளது.

    உருளைக்கிழங்கு மொத்த மார்க்கெட்டில் கிலோவுக்கு ரூ.35 முதல் ரூ.60வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு பின்னர் உருளைக்கிழங்கு விலை கணிசமாக குறைவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கோயம்பேடு உருளைக்கிழங்கு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

    மேலும் படிக்க...கொரோனா இரண்டாவது அலை எச்சரிக்கை உள்ளது: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு அறிவிப்பை திரும்ப பெறவேண்டும் - மு.க.ஸ்டாலின் காட்டம்



    அடிப்படை உணவுகளில் வெங்காயமும் உருளையும் முக்கிய பங்காக இருப்பதால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கடுமையான விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தைச் சேமிக்கும் அளவீட்டை கிடங்குகளுக்குக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: