ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை போரூர் - கோடம்பாக்கம் இடையே போக்குவரத்து மாற்றம்

சென்னை போரூர் - கோடம்பாக்கம் இடையே போக்குவரத்து மாற்றம்

சென்னையில் போக்குவரத்து இடமாற்றம்

சென்னையில் போக்குவரத்து இடமாற்றம்

ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சென்னை போரூர் , கோடம்பாக்கம் இடையே இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னையில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பில் இருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2-ம் கட்டபணி துவங்கவுள்ள காரணத்தினால் 08-08-2021 மற்றும் 09-08-2021 ஆகிய இரண்டு நாட்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையில் பரிச்சார்ந்த முறையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

Also Read:  நள்ளிரவில் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் கொள்ளையர்கள்.. அதிரவைத்த சிசிடிவி காட்சிகள் - இருவர் கைது

பேரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இவ்வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை. ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2-வது அவின்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.

Also Read:  அரசு உத்தரவை மீறி ஆடி அமாவாசைக்கு திதி கொடுக்க திருவள்ளூரில் குவிந்த பக்தர்கள் - காற்றில் பறந்த தமிழக அரசின் உத்தரவு

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்

போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று வடபழனி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பி.டி.ராஜன் சாலை வழியாக கே.கே.நகர் செல்லலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அசோக் பில்லர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல்நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக்நகர் 2-வது அவின்யூ சாலை, துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.வடபழனி சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் துரைசாமி சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக ஆற்காடு சாலையில் நேராக சென்று பவர்கவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்ல வேண்டும். அதேபோல் கே.கே.நகரிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார் சாலையில் வலதுபுறம் திரும்ப அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்றடையலாம்.

வன்னியர் தெருவிலிருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்ல அனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. வழக்கம்போல் இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று பவர்ஹவுஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Chennai, Chennai metro, Koyambedu, Metro Rail, News On Instagram, Traffic