Home /News /tamil-nadu /

‘எங்கடா அந்த மதுரவாயல்’ என தேடும் வட மாநிலத்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

‘எங்கடா அந்த மதுரவாயல்’ என தேடும் வட மாநிலத்தவர்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் பாலம் திட்டப் பணிகள் கலைஞர் ஆட்சிக் காலத்தில்  துவங்கப்பட்டது - அமைச்சர் மா.சுப்ரமணியன்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை மாநகராட்சி வளசரவாக்கம்   155 வது வார்டு ராமபுரத்தில் 20 கோடி மதிப்பீட்டில் மழை நீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதில், மதுரவாயல்  சட்டமன்ற உறுப்பினர் காரம்பாக்கம் கணபதி, மண்டல குழு தலைவர் நௌம்பூர் ராஜன், கவுன்சிலர் வலசை செல்வகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும்,    பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் மா. சுசுப்ரமணியன் "இந்தியாவிலேயே முதல்  நீண்ட 19 கிலோமீட்டர் தூரம் கொண்ட சென்னை மதுரவாயல் -துறைமுகம் பறக்கும் பாலம் திட்டப் பணிகள் கலைஞர் ஆட்சிக் காலத்தில்  துவங்கப்பட்டது .

     ஆனால், இந்திய வரலாற்றில், கலைஞர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்ட இந்த பறக்கும் மேம்பாலம் வந்து விடக் கூடாது என்பதற்காக அதிமுக அரசு சில பொருந்தாத காரணங்களை கூறி  தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். இந்த  மேம்பாலம் வந்தே தீர வேண்டும் என்று திமுகவினர் உறுதியாக  போராட்டம் நடத்தியதாகவும், இதற்காக கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

    இதையும் வாசிக்க: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை மையம்

    மேலும் பேசிய அவர், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சி வந்தவுடன் இந்த மேம்பாலம் திரும்பவும் கட்டப்படும்  என்று தெரிவித்திருந்தார். வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, ரூபாய் 5885  கோடி  செலவில் ஈரடுக்கு மேம்பாலமாக தற்போது வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன. டெல்லி, மத்திய பிரதேசம் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மதுரவாயிலை தேடிக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு பாலத்தின் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Ma subramanian

    அடுத்த செய்தி