சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வெங்கடேஷ். இவரின் மனைவி ஆதிலட்சுமி. வீட்டு வேலைகள் செய்து வருகிறார். கொரோனா காரணமாக போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், சமீபகாலமாக கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளைச் சரிசெய்யும் துப்புரவுப் பணிகளில் வெங்கடேஷ் ஈடுபட்டு வருகிறார். இவரின் மகன் சுபாஷ், ரஷ்யாவில் 3ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார்.
வெங்கடேஷ் கடந்த 2 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தன் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்தி வந்தார். இந்நிலையில் 3ம் ஆண்டுக்கான கட்டணத்தைச் செலுத்த இயலவில்லை. இதனால் மாணவர் சுபாஷ் படிப்பை பாதியிலேயே கைவிடும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பதிவு செய்து இருந்தது.
Also read: நீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
இந்தச் செய்தியைப் பார்த்த கோவை நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், மாணவரின் இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொண்டார். கடந்த மாதம் மாணவன் சுபாஷின் பெற்றோரிடம் மருத்துவப் படிப்பிற்காக முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை அன்பரசன் வழங்கினார். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது தவணையாக 1.17 லட்சம் ரூபாயை நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் வழங்கினார்.