• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடையும் முட்டுக்காடு நீர்நிலை

குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடையும் முட்டுக்காடு நீர்நிலை

Youtube Video

சென்னையின் வெள்ளநீர் வடிகாலாக காணப்படும் முட்டுக்காடு நீர்நிலையில், ஊராட்சி நிர்வாகமே குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்தி வரும் அவலம் நிலவுகிறது.

  • Share this:
    கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே அமைந்துள்ளது முட்டுக்காடு நீர்நிலை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்நிலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளால் சில காலம் அவை தவிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஊரடங்கு காலத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட்டு, நீர்நிலை அசுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு, அலுவலக குப்பைகள் மட்டுமின்றி மருத்துவக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. அதுவும் திருப்போரூர், படூர், நாவலூர் என சுற்றுவட்டார ஊராட்சிகளுக்கு சொந்தமான வாகனங்களிலேயை குப்பைகள் கொண்டு வரப்பட்டு, இங்கு கொட்டப்படுகிறது.

    குப்பைகள் கொட்டப்படுவதால் முட்டுக்காடு உவர்நீர் சாக்கடை நீராக மாறி விட்டதாகவும், நீர்நிலையின் ஆழம் குறைந்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    நீர்நிலை தொடர்ந்து மாசடைந்து வருவதால், கடந்த காலங்களில் வலசை வரும் பெலிக்கன், ப்ளமிங்கோ உள்ளிட்ட அரியவகை பறவைகளின் வருகையை குறைந்து விட்டது. இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்கின்றனர் ஆர்வலர்கள்.

    மேலும் படிக்க...Latest Tamil News: அண்மைச்செய்திகள் உடனுக்குடன் லைவ் அப்டேட்ஸ்


    முட்டுக்காடு நீர்நிலையில் குப்பைகள் கொட்டப்படுவது பற்றி சம்பந்தப்பட்ட திருப்போரூர் வட்டாட்சியர் மல்லிகா ராஜேந்திரனை தொடர்புகொண்டபோது, தற்போதுதான் பணியிட மாறுதலாகி வந்திருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இதேபோல், மூத்த அதிகாரி ஒருவரை அனுப்பி ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருப்பதாக சுற்றுச்சூழல் துறை இயக்குநர் கிரிதர் தெரிவித்தார்.

     

    முட்டுக்காடு என்றதுமே அனைவருக்கும் நினைவுக்கு வருவது படகுசவாரி செல்ல சிறந்த இடம் என்பதுதான். ஆனால், சென்னை மாநகரத்தின் வெள்ளநீர் வடிகாலாகவும் முட்டுக்காடு நீர்நிலை உள்ளது. இதனால் சூழல் முக்கியத்துவம் கருதி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: