• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்கிகளில் நடக்கும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்.. (வீடியோ)

வங்கிகளில் நடக்கும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்.. (வீடியோ)

Youtube Video

சென்னையில் வங்கி கணக்கில் தவறி பண பரிமாற்றம் செய்தது போன்று நாடகமாடி புதியவகை மோசடியில் ஒரு கும்பல் ஈடுப்படுவதாக புகார் எழுந்துள்ளது. நூதன மோசடி அரங்கேறுவது எப்படி?

  • Share this:
    சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வங்கி தொடர்பான சைபர் குற்றங்கள் நூதன முறையில் சைபர் கொள்ளையர்கள் அரங்கேற்றி வருகின்றனர். அதுபோன்று ஒரு நூதன முறை கொள்ளை தற்போது புதிதாக உருவாகி உள்ளது.

    சென்னையில் சிலருக்கு திடீரென வங்கிக் கணக்கில் 15,000 முதல் 10,000 வரை பணம் பரிமாறப்பட்டது போன்று குறுஞ்செய்தி வங்கியில் இருந்து வருவது போன்று வந்துள்ளது. வங்கியில் இருந்து வந்த குறுந்தகவல் வந்த உடன் மற்றொரு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் அல்லது குறுந்தகவல் மீண்டும் வரும். அதில் மருத்துவமனையில் இருக்கும் எனது தாயின் வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டிய தொகை உங்கள் கணக்கிற்கு தவறுதலாக வந்து விட்டதாக அதில் குறிப்பிட்டிருக்கும்.

    உடனே அந்த தொகையை பேடிஎம் ,கூகுல் ஆப் மூலமாக ஒரு குறுப்பிட்ட எண்ணிற்கு திருப்பி அனுப்புங்கள் அவசரமாக மருத்துவ தேவைக்கு அனுப்பியது என்று குறுந்தகவல் மீண்டும் வரும். வங்கிக் கணக்கிற்கு சென்று பணம் உண்மையாக வந்துள்ளதா என ஆய்வு செய்ய விடாமல் திசை திருப்பி யோசிக்கவிடாமல் அந்த கும்பல் தொந்தரவு செய்ய தொடங்கும்.

    சரி தவறுதலாக வந்த பணம் தானே என்று எண்ணும் சிலர் பணத்தை அந்த குறுப்பிட்ட எண்ணிற்கு அனுப்பிவிடுவர். ஆனால் வங்கி கணக்கை சோதித்து பார்த்தால் குறுந்தகவல் வந்ததுடன் சரி ஆனால் வங்கி கணக்கில் பணம் வந்திருக்காது. அதை சோதனை செய்யாமல் குறுந்தகவல் வந்த உடன் சிலர் பணம் வங்கிகணக்கில் பணம் வந்ததாக எண்ணி ஏமாற்றப்பட்டுள்ளனர்.

    இதுபோன்ற புகார்கள் சைபர் காவல்நிலையங்களில் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று போலீசார் பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.

    குறுந்தகவல் வந்தால் பணம் வங்கிகணக்கில் வந்துள்ளதா என்று சோதித்து பார்த்து முடிவெடுக்க அறிவுரை வழங்கியுள்ளனர் போலீசார்.

    மேலும் படிக்க...104 கிலோ தங்கம் திருட்டு.. கள்ளச்சாவி போட்டது யார்?

     



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: