பெருகிவரும் வழிப்பறி சம்பவங்கள்: இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவல்துறை

news18
Updated: June 13, 2018, 5:15 PM IST
பெருகிவரும் வழிப்பறி சம்பவங்கள்: இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்தும் காவல்துறை
மாதிரி படம்
news18
Updated: June 13, 2018, 5:15 PM IST
சென்னையில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், ரோந்துப் பணியை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மை காலமாகவே தமிழகம் முழுவதும் வழிப்பறி கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. சென்னையில் இரவு நேரங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

இதையடுத்து, இரவு நேரத்தில் மட்டும் 6 துணை ஆணையர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து, இரண்டு நாட்களாக சென்னையில் இரவு நேர கண்காணிப்பை தீவிரப்படுத்திய போலீசார், பழைய குற்றவாளிகள், குற்றப் பின்னணியில் உள்ளவர்கள், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் என 3,000-க்கும் மேற்பட்டோரை பிடித்துள்ளனர்.

நேற்றிரவு மட்டும், சந்தேகத்தின் அடிப்படையில் 442 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இதேபோல, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 20 பேர், தலைமறைவுக் குற்றவாளிகள் 7 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 53 பேர் என நேற்று ஒரே நாளில் 600-க்கும் மேற்பட்டோர் பிடிபட்டுள்ளனர்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...