ஏடிஎம் கார்டு திருடி பணம் கொள்ளை... 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

ஏடிஎம் கார்டு திருடி பணம் கொள்ளை... 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
ஏடிஎம்
  • Share this:
சென்னை திருவல்லிக்கேணியில் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணத்தை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அயோத்தியா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அப்பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று பணத்தை எடுத்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தின் மீது கார்டை வைத்து விட்டு பணம் எண்ணியபோது, அருகில் இருந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் ஏடிஎம் கார்டை திருடி, அதே போன்ற போலி கனரா வங்கி ஏடிஎம் கார்டை வைத்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்றபோது, வங்கி கணக்கில் இருந்து கூடுதலாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Also see...
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading