‘ரூட்டு கெத்து’ காட்ட பேருந்தில் அட்டகாசம்.. பெற்றோரிடம் எழுதி வாங்கி மாணவர்களை விடுவித்த போலீஸ்

மாணவர்கள்

பேருந்தில் அட்டகாசம் செய்த கல்லூரி மாணவர்களை கைது செய்த டி.பி சத்திரம் போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

 • Share this:
  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 நபர்கள் மீது டிபி சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு.

  தமிழகத்தில் முதலாமாண்டு தவிர்த்து பிற வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரிகள் நேற்று முதல் செயல்பட தொடங்கியது. முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற  வேண்டும் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

  சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நேற்று அமைந்தகரை பேருந்து நிறுத்தத்தில் மாநகரப் பேருந்து வழித்தட எண் 50 பாரிஸ் மார்க்கமாக செல்லும் பேருந்தில் ஏறி செயின்ட் ஜார்ஜ் பள்ளி பேருந்து நிறுத்தத்தில்  பேருந்து வந்து கொண்டிருக்கும் போது 9 மாணவர்கள் பேருந்தை தட்டி சத்தம் எழுப்பிக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

  Also Read:  செவ்வாய்கிழமை ரூ300... சிறப்புபூஜைக்கு 1000.. - மது அருந்த வைத்து குறி சொல்லும் விசித்திர சாமியார்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஓட்டுனர் மற்றும் நடத்துனர் புகாரின் பேரில் இரண்டாமாண்டு பி.காம் படித்து வரும் மாணவர்கள் 8 நபர்கள் மீது டிபி சத்திரம் போலீசார் அரசு உத்தரவை மீறுதல், தொற்றுநோய் பரப்புதல், தொற்று நோய் பரப்பும் தீய எண்ணத்துடன் செயல் படுதல் உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  Also Read: 2000 வாங்கிட்டு என்கிட்டயே.. நோ பார்கிங்கில் காரை நிறுத்திவிட்டு ஏகவசனம் பேசிய விஏஓ - வைரலாகும் வீடியோ

  நேற்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 200 நபர்கள் மீது மூன்று வழக்குகள் கீழ்ப்பாக்கம் போலீசார் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 8 மாணவர்களையும் கைது செய்த டி.பி சத்திரம் போலீசார் அவர்களின் பெற்றோர்களிடம் எழுதி வாங்கி பின் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: