மந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

news18
Updated: August 18, 2019, 2:56 PM IST
மந்திரவாதி கூறியதால் வீட்டில் 21 அடி குழிதோண்டிய போலீஸின் மனைவி - விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்
போலீஸ் மனைவி மைதிலி
news18
Updated: August 18, 2019, 2:56 PM IST
ஓய்வு பெற்ற தலைமை காவலரின் மனைவி ஒருவர் தனது வீட்டினுள் 21 அடி ஆழத்திற்கு குழி தோண்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தை அடுத்த டி.பி.சத்திரம் கே.வி.என் புரம் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. ஓய்வு பெற்ற போலீஸ் தலைமைக்காவலர். இவரது மனைவி மைதிலி (43). இவரது வீட்டு வாசலில் இருந்து மூட்டை மூட்டையாக மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் வீட்டிற்குள் குழி தோண்டும் சத்தம் கேட்பதாகவும் அக்கம்பக்கத்தினர் டி.பி சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே டிபி சத்திரம் போலீசார் மைதிலி வீட்டிற்கு சென்று பார்த்தனர். வீட்டினுள் 21 அடி ஆழத்தில பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருந்ததும், மணல் எடுத்து மூட்டை கட்டி வெளிய வைத்திருந்தும் தெரிந்தது.


மேலும் சில நாட்களாக ஆட்டோவில் மூட்டை கட்டி எடுத்து சென்று வந்ததும் தெரிய வந்தது. உடனே டி.பி சத்திரம் போலீசார் மைதிலியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது, தன்னுடைய குடும்பத்தில் பல இழப்புகளை சந்தித்ததாகவும், கணவர் ராஜா பக்கவாதத்தில் இருந்ததால் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மந்திரவாதி சுரேஷ் என்பவரை மைதிலி அணுகியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வீட்டிற்குள் செய்வினை வைக்கப்பட்டிருப்பதாகவும் அதனை தோண்டி எடுங்கள் என்று மந்திரவாதி சுரேஷ் கூறியதை நம்பி ஆட்களை வைத்து வீட்டிற்குள் 21 அடி தோண்டி கயிறுகள், பொம்மையை எடுத்ததாக போலீசில் மைதிலி கூறியுள்ளார்.

Loading...

அதற்காக மைதிலி மணல் திருட்டில் ஈடுபடவில்லை என்பதும், மணல் மூட்டைகளை பாதுகாப்போடு வைத்திருந்ததும், போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக அமைந்தகரை தாசில்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தாசில்தார் தலைமையிலான வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர். பிறகு மைதலியிடம் போலீசார் எழுதி வாங்கி அனுப்பினர். வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இது தொடர்பாக மைதலி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வீட்டிற்குள் செய்வினை வைத்திருப்பதாக மந்திரவாதி சுரேஷ் என்பவர் தெரிவித்ததால் என்னுடைய வீட்டிற்குள் 21 அடி ஆழத்திற்கு தோண்டி மாந்திரீக கயிறுகள், பொம்மை எடுத்து அழித்து விட்டோம். எடுத்த மணல் மூட்டைகளை விற்கவில்லை. பத்திரமாக வைத்துள்ளோம். தற்போது மீண்டும் மணலை கொண்டு வந்து மூடும் பணியை செய்து வருகிறோம்" என்றார்.

வீடியோ பார்க்க: ரயில் பயணிகளிடம் நகை திருடும் வடமாநில திருடன் கைது

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...