காதலி அழகாக இல்லை என வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன் : திருமணம் செய்துவைத்த போலீஸ்..!

காதலி அழகாக இல்லை என வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலன் : திருமணம் செய்துவைத்த போலீஸ்..!
போலீசார் நடத்தி வைத்த திருமணம்
  • News18
  • Last Updated: February 18, 2020, 5:06 PM IST
  • Share this:
சென்னை அனகாபுத்தூரில் காதலியை ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலனை பிடித்து திருமணம் செய்து வைத்தனர் போலீசார்.

சென்னை அனகாபுத்தூர் லேபர் பள்ளி தெருவைச் சேர்ந்தவர் கவிதா. அவர் பொழிச்சலூர் 7-வது குறுக்கு தெரு அகத்தீஸ்வரர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 4 வருடமாக காதலித்து வந்தார். தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்னைகள் ஏற்படவே வெங்கடேஷ் கவிதாவை வேண்டாமென்று கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த கவிதா தன்னை காதலித்து மனைவியிடம் இருப்பதுபோல் என்னிடம் நடந்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் வெங்கடேஷ் மீது புகார் அளித்தார்.


புகாரின் அடிப்படையில் வெங்கடேஷை அழைத்து வரச் சென்றபோது, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பின்னர் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்பொழுது வெங்கடேஷ் நான்கு வருடமாக கவிதாவை காதலித்து வந்ததை ஒப்புக்கொண்டார். கவிதா அழகாக இல்லாததால் அவரை விட்டு பிரிந்ததாக வெங்கடேஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் ஏற்கனவே வெங்கடேஷ் வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்ததாலும், மூன்று முறை கவிதா தற்கொலைக்கு முயற்சி செய்ததாலும், வெங்கடேஷை விட்டால் பிடிக்க முடியாது என்று எண்ணி இவர்களுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று இரு வீட்டார் சம்மதத்துடன் போலீசார் முடிவெடுத்து காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தனர்.

காவல் நிலையத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் நிகழ்ந்தது. பின்னர் இருவரிடமும் புகாரை திரும்பப் பெறுமாறு எழுதி வாங்கிக்கொண்டு போலீசார்  தம்பதிகளை வாழ்த்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.Also see...
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்