முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இப்படி ஒரு வீக்னஸா? - கைவரிசை காட்டிய வட இந்திய கொள்ளையர்கள்

எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இப்படி ஒரு வீக்னஸா? - கைவரிசை காட்டிய வட இந்திய கொள்ளையர்கள்

கொள்ளையடித்த நபர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் கொள்ளையர்களை நெருங்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

கொள்ளையடித்த நபர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் கொள்ளையர்களை நெருங்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

கொள்ளையடித்த நபர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் கொள்ளையர்களை நெருங்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது

 • Last Updated :

  வடமாநில கொள்ளையர்கள் எஸ்.பி.ஐ வங்கியின் பண டெபாசிட் மிஷினை மட்டுமே குறி வைத்து கொள்ளையடித்தது ஏன்? போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்.

  சென்னை செனாய் நகர் பகுதியில் உள்ள எஸ்.பி ஐ வங்கி ஏடி.எம்மில் நூதன முறையில் பணம் எடுக்கபட்டது வங்கி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.அந்த ஏடி எம்மில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரு நபர்கள் ஏடி.எம்மில் பணம் எடுக்கப்பட்டது போல் காண்பித்தது ஆனால் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக காண்பிக்காததால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

  Also Read: ஏடிஎம்மில் பணமெடுத்தும் அக்கவுண்டில் டெபிட் ஆகவில்லை.. - சிசிடிவி காட்சியைப் பார்த்து ஷாக்கான வங்கி மேலாளர்

  இதேபோல்விருகம்பாக்கம்,வடபழனி,பெரம்பூர்,ராமாபுரம்,பெரியமேடு, கீழ்பாக்கம்,வேளச்சேரி, என ஒரே நாளில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் இருந்து 20லட்சம் ரூபாய் வரை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

  இது குறித்து முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் எஸ்.பி.ஐ கேஷ் டெபாசிட் செலுத்தக்கூடிய ஏடி.எம் மெஷீனை மட்டுமே குறிவைத்து கும்பல் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. ஓ.கே.ஐ என்ற ஜப்பான் நிறுவனம் தயாரித்த ஏடி.எம்மில் ஏடி.எம்.கார்டை பயன்படுத்தி பின் நம்பர் செலுத்திய பின்பு பணம் வெளியே வரும். ஆனால் 20 நொடிக்குள் எடுக்கவில்லையென்றால் பணமானது 20 நொடிக்குள் உள்ளே சென்றுவிடும்,அதை பயன்படுத்தி கொண்ட கும்பல் சென்சார்,ஷட்டரை விரலால் மறைத்து பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்சாரை மறைப்பதால் பணம் மீண்டும் வந்துவிட்டது என நினைத்து கணக்கிலிருந்து பணம் போகாமல் இருக்கும்.கொள்ளையடித்த நபர்கள் போலி முகவரி மூலம் தொடங்கிய கணக்கை வைத்து கொள்ளையடித்ததால் கொள்ளையர்களை நெருங்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மேலும் கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். இதுமட்டுமின்றி மத்திய குற்றப்பிரிவு வங்கி தடுப்பு போலீசாரும் களத்தில் இறங்கியுள்ளனர்.

  Also Read: தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை: நடவடிக்கை எடுக்கப்படும் - நிதியமைச்சர் பி.டி.ஆர் உறுதி

  முதல்கட்ட விசாரணையில் இவர்கள் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், எஸ்.பி.ஐ. ஏடிஎம்-களை மட்டுமே குறிவைத்து கைவரிசை காட்டியதும் தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் ஹரியானா மாநிலத்திற்கு தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  top videos

   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

   First published: