• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை மூதாட்டிக்கு உரிய நேரத்தில் உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

சென்னை மூதாட்டிக்கு உரிய நேரத்தில் உதவிய பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

பெண்  காவலர்

பெண் காவலர்

சென்னையில் மூதாட்டிக்கு பெண் காவலர் செய்த உதவி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

  • Share this:
சென்னை தியாகராய நகரில் தனியாக வசிக்கும் 80 வயது மூதாட்டி ஐதராபாத்தில்  வசிக்கும் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக கார் மூலம் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று  உதவிய  பெண் காவலரை காவல் ஆணையாளர்  நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கடந்த மாதம் 29-ம் தேதி மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய பெண் ஒருவர் தான் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும்,  தனது  தாய் வசந்தா  என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும், ஆகவே, எனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, விமான நிலையம் வரை அழைத்து செல்ல உதவி தேவை என கூறியுள்ளார்.

உடனே, மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பெண் காவலர் மகாலஷ்மி என்பவரிடம் விவரத்தைக் கூறி அந்த மூதாட்டிக்கு உதவுமாறு கூறியுள்ளார். உடனே காவலர் மகாலஷ்மி மேற்படி அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்று மூதாட்டி வசந்தா சுப்ரமணியத்தை நேரில் சந்தித்து விவரங்களை கூறி, தங்களது மகளை பார்க்க ஐதராபாத்திற்கு செல்ல ஜுலை 1-ம் தேதிக்கு மகள் விமான டிக்கெட்டு எடுத்துள்ளதாகவும் கூறிவிட்டு சென்றார்.




படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்








பின்னர் பெண் காவலர் மகாலஷ்மி, வசந்தாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடைமைகள் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு தனது சொந்த செலவில் ஏற்பாடு செய்த தனியார் கார் மூலம் விமான நிலையத்தின் போர்டிங் வரை சென்று உடைமைகள் மற்றும் பொருட்களுடன் நல்ல முறையில் மூதாட்டி வசந்தாவை விமானத்தில் அனுப்பி வைத்தார்.

மூதாட்டி ஐதராபாத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு நல்லபடியாக வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் மூதாட்டியும் அவரது மகளும் பெண் காவலர் மகாலஷ்மிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர்.



மேலும், பெண் காவலரின்  உதவியை பாராட்டி மூதாட்டியின் மகள் பேஸ்புக் சமூக வலைதளத்தில், நாங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம், தன்னுடைய தொலைபேசி அழைப்பின் மூலம், எனது 80 வயதான தாய்க்கு, சொந்த செலவில் கார் ஏற்பாடு செய்து விமானநிலையத்திற்கு அழைத்து சென்று உதவிய மாம்பலம் காவல் நிலைய காவலர் மகாலஷ்மிக்கு  நன்றி  தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மூதாட்டியை அழைத்துச் சென்று விமானத்தில் ஏற்றிவிட உதவிய மாம்பலம் காவல் நிலைய பெண் காவலர் மகாலஷ்மியை காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், நேரில் அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: