• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருட்டுபோன மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

திருட்டுபோன மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு!

மீட்கப்பட்ட மொபைல் போன்கள்

மீட்கப்பட்ட மொபைல் போன்கள்

தனிநபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருடுபோன போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை வைத்து பல்வேறு இடங்களில்  சோதனை மேற்கொண்டு அந்த மொபைலை பறிமுதல் செய்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    திருவல்லிக்கேணி காவல் சரகத்துக்கு உட்பட்ட அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், திருவல்லிக்கேணி, சூளைமேடு, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஜாம் பஜார் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் திருடப்பட்ட 217 மொபைல் போன்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் இன்று ஒப்படைத்தனர்.

    சமீபகாலமாக சென்னையில் மொபைல் போன் திருட்டு சம்பவங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன. காவல்துறையினர் குற்றவாளிகளை பிடித்தும் திருட்டுபோன மொபைல் போன்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் தனிநபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் திருடுபோன போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை வைத்து பல்வேறு இடங்களில்  சோதனை மேற்கொண்டு அந்த மொபைலை பறிமுதல் செய்தனர். இது திருட்டு மொபைல்போன்களை விற்பனை செய்பவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் போலீசார் சென்னை முழுவதும் கடந்த சில தினங்களாக  தேடுதல் வேட்டையில் இறங்கினர். நேற்று முன்தினம் (நவம்பர் 16) தி.நகர் போலீசார் சத்யா பஜாரில் 1000-க்கும் மேற்பட்ட மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். அதுபோல திருவல்லிக்கேணி காவல் மாவட்ட காவல்துறையினரும் அவரவர் பகுதிகளில் மொபைல் போன் வேட்டையில் இறங்கினர்.

    அதனடிப்படையில் ஐஸ் ஹவுஸ், அண்ணா சாலை, அண்ணா சதுக்கம், சேப்பாக்கம், பாண்டி பஜார், எழும்பூர், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட இடங்களில் உள்ள மொபைல் போன் விற்பனை கடைகளில் சோதனை நடத்தி பல மொபைல்களையும்,  ஐ.எம்.ஈ.ஐ. நம்பரை வைத்து திருட்டுபோன மொபைல் போன்களையும் மீட்டனர்.

    இவ்வாறு மீட்கப்பட்ட 217 மொபைல் போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் இன்று ஒப்படைத்தனர்.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: