ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

விதி மீறி பட்டாசு வெடித்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை கமிஷனர் அறிவிப்பு!

விதி மீறி பட்டாசு வெடித்தால் புகார் தெரிவிக்கலாம் : சென்னை கமிஷனர் அறிவிப்பு!

சங்கர் ஜிவால்

சங்கர் ஜிவால்

தீபாவளியின்போது அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்தார்.

  கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிசிடிவி, மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சகிதம் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

  இன்று இரவு போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து பேசிய அவர், பட்டாசு கடைகளின் உரிமங்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், முறையான உரிமங்கள் இல்லாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

  மேலும் தீபாவளியின்போது ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார்.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Ban firecrackers, Crackers, Deepavali, Diwali