தலைமறைவாக உள்ள பப்ஜி மதனை விரைவில் கைது செய்து விடுவோம் - மாநகர காவல் ஆணையர்

மதன்

பப்ஜி கேம் மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறோம். அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம்.

 • Share this:
  தலைமறைவாக இருக்கும் பப்ஜி மதனை விரைவில் கைது செய்து விடுவோம் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

  சென்னை ராயப்பேட்டையில் கடந்த மார்ச் மாதம் ஆதரவற்ற நிலையில் உடலில் காயங்களுடன் உடல்நலம், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரத்தில் அசாமை சேர்ந்த 21 வயதான ஜாபர் அலிஎன்ற இளைஞரை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உடல் நலம், மன நலம் தேறிய அவரை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் துறை 65 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறது.

  கடந்த மூன்று மாதத்தில், இதேபோல் மாயமான 6 பேரை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இருக்கிறோம். 44 ஆதரவற்றோரின் சடலங்களையும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் இணைந்து அடக்கம் செய்து இருக்கிறோம். இந்த சேவையை விரிவு கருதி விரிவு படுத்துவது தொடர்பாக விரைவில் தொண்டு நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறோம்.

  பப்ஜி கேம் மதன் வீட்டில் சோதனை நடத்தி கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறோம். அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம். தலைமறைவாக உள்ள அவரையும் விரைவில் கைது செய்து விடுவோம்.

  OTT, social mediaக்கள் தொடர்பாக அரசு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதை பின்பற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். OTTல் complaint mechanism, Monitoring mechanism, Supervising mechanism ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் பதிவிடுவது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்தால், மேற்கண்ட யூடியூப், ஃபேஸ்புக், டிவிட்டர் நிர்வாகங்களை தொடர்புகொண்டு ஆபாச வீடியோக்கள் பதிவுகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

  Must Read : பெற்ற தாயையே கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை

  முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. அவர் மீது சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: