தடை செய்யப்பட்ட பிறகும் ஆன்லைனில் அமோகமாக நடக்கும் மாஞ்சா நூல் விற்பனை

பட்டம் பறக்க விட 2007-ம் ஆண்டு சென்னை காவல்துறை தடை விதித்தும் ஆன்லைனில் மாஞ்சா நூல் விற்பனை அமோகமாக நடக்கிறது

தடை செய்யப்பட்ட பிறகும் ஆன்லைனில் அமோகமாக நடக்கும் மாஞ்சா நூல் விற்பனை
ஆன்லைனில் கலைகட்டும் மாஞ்சா நூல் விற்பனை
  • Share this:
மாஞ்சா நூலில் சிக்கி பல சிறுவர்களும், வாகன ஓட்டுநர்களும் உயிரிழந்ததை தொடர்ந்து அந்நூலைக் கொண்டு பட்டம் பறக்க விட 2007ஆம் ஆண்டு சென்னை காவல்துறை தடை விதித்தது. மீறி மாஞ்சா நூலில் பட்டம் விடுபவர்கள் மீதும், மாஞ்சா நூலை விற்பவர் மீதும் குண்டர் சட்டம் பதியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த கருணாநிதி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது மாஞ்சா நூல் அறுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தடை செய்யப்பட்ட பிறகும் சென்னையில் தொடரும் மாஞ்சா நூல் கலாசாரம் மக்களை கதிகலங்க வைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்குழு நடத்திய கள ஆய்வில், மாஞ்சா நூல் விற்பனையும், பட்டம் எனப்படும் காற்றாடி விற்பனையும் ஆன்லைனில் அதிகம் விற்பனை ஆவது தெரியவந்துள்ளது.


தனியாக கடைகள் ஏதும் அமைத்து விற்பனை செய்ய முடியாததால் சொல்லும் இடத்திற்கு சொன்ன நேரத்தில் வந்து நூலை பெற்றுக் கொள்ள சொல்கிறார்கள் விற்பனையாளர்கள்.

Also read... கொரோனா நோயாளிக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது... செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன? இளம்பெண் தெரிவித்த அதிர்ச்சி தகவல்கள்

சாதாரண நூலுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை சொல்லும் விற்பனையாளர்கள், காவல்துறைக்கு தெரியாமல் ரகசியமாக அதனை விற்பனை செய்து வருவதாகவும் கூறுகிறார்கள்.அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற முறைப்படுத்தப்பட்ட இ-காமர்ஸ் தளங்களில் மாஞ்சா நூல் விற்பனைக்கு இல்லாவிட்டாலும் ஃபேஸ்புக் போன்ற முறைப்படுத்தப்படாத சமூக வலைதளங்களில் மாஞ்சா நூல் விற்பனை சக்கை போடு போடுகிறது.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading